கோப் குழுவின் அறிக்கை பின்பற்றப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை – கோப் குழுவின் தலைவர்

191 0
கோப் குழுவினால் 58 நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பின்பற்றப்பட்டிருந்தால் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் தேவை ஏற்பட்டிருக்காது என கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்
கோப் குழுவினால் நடத்தப்பட்ட 98 கூட்டங்களின்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி வௌவேறு அரசாங்க காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தரவுகள் வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் வானுர்தி சேவை, மக நெகும வேளைத்திட்டம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், துறைமுகம், தொலைத் தொடர்பாடல் ஆணையம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிதி மோசடி தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்பட்சத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரியளவிலான நட்டத்தை மீட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment