இலங்கையில் சட்ட அமுலாக்கம் தொடர்பில் நீதியமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் இடையே கருத்து மோதல்

908 0
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், மனித கொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாட்டின் நீதிமன்றம செயற்பாடுகளை விரைவுப்படுத்த மேற்கொண்ட ஒரு செயற்பாட்டையேனும் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதியமமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிடம் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமது முகப்புத்தக கணக்கின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் அஜித் பீ  பெரேரா, ஊழல் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவது குறித்து நீதியமைச்சர் மீது சுமத்தினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பதவி காலத்தின் அரைவாசி நிறைவு பெற்றுள்ளது.
எனினும் இதுவரையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வழக்கு கூட நிறைவுபெறவில்லை.
அதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நீதியமைச்சர், பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவை கடுமையாக சாடினார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல்வாதிகளுக்கு எதிராக நடகடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா வலியுறுத்துகிறார்.
அத்தகைய காட்டு மிறாண்டித்தனமாக யுகம் ஒன்றை மீண்டும் உருவாக்க முடியாது.
அதற்கு பதில் வழங்கும் முகமாக பிரதியமைச்சர் தமது முகப்பத்தகத்தில் பாரிய மோசடிகள் மற்றும் மனித கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்த நீதியமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று கோள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment