நாளை மறுதினம் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு

322 0
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர் கட்சியினர், முன்வைத்துள்ள நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில், கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை மறு தினம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்க தரப்பு கட்சிகளின் கூட்டம் ஒன்றும் விரைவில் நடத்தப்படவுள்ளதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளை மேற்பார்வையிட சென்றிருந்த போதே அவர் இதனை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a comment