ருவன்வெல்ல பிரதேசத்தில் நீராட சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதுடைய ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார்.
அவர் நீராட சென்று மீண்டும் திரும்பாததால் அவரது மகன் தேடிச் சென்ற போது நீர்த் துவாரம் ஒன்றில் இருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

