இலங்கையில் வரட்சி – 19 மாவட்டங்களில் 11 லட்சம் பேர் பாதிப்பு

4141 0

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக சுமார் 11 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்கள் இதுவரை வரட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகளவிலான பாதிப்பு வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களை சேர்ந்த 4 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரட்சி காரணமாக நீரையை பெற்று கொள்வதற்காக காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்குள் நுழைவதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு, அநுராதப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராம புறங்களில் நுழையும் காட்டு யானைகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் என்பனவற்றை சேதப்படுத்துவதாகவும் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a comment