வடகொரியா மீது புதிய பொருளாதார தடை – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு

5347 30

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க கோரும் அமெரிக்காவின் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகள் பங்கேற்கின்றன.

ரஸ்யாவும் சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு ரஸ்யாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்றைய வாக்கெடுப்பில் ரஸ்யாவும், சீனாவும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருளாதார தடை மூலம் வடகொரியாவின் வருவாயில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உலக நாடுகளின் கோரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment