எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக பணம் சேகரிக்கும் நோக்கத்தில்தான் ஹம்பாந்தோட்டை முறைமுகம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹக்குருவெல்ல – திக்கும்புர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு செல்வதற்காக கிராமங்களில் புனரமைப்பு செய்ய நினைக்கின்றனர்.
எனவே, இதற்கு தேலைவயான பணத்தை திரட்டுவதற்கே ரணில் விக்கிரமசிங்க ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

