மட்டக்களப்பில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 11 மாடுகளை லொறி ஒன்றில் கொண்டு சென்ற இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி றெதிதென்ன பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு குறித்த மாடுகளை கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டபோது, இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

