முழுமையாக முகத்தை மூடக்கூடிய தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் பிலியந்தலை நகரின் தனியார் வங்கியொன்றில் ஐந்து இலட்சத்து 4 ஆயிரத்து 90 ரூபாய்யை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டது.
வங்கியினுள் திடீரென நுழைந்த கொள்ளையகள் காவலர்களுக்கு போலியான துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற கொள்ளையர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பில் பிலியந்தலை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

