கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து;சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

326 0

கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்ப்பட  ஆறுபேர் வைத்தியசாலையில்

குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,

இன்று அதிகாலை 3.20மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறைக்குள் மின்சாரகம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு வந்து புகுந்தததில்  சாரதி உட்ப்பட  ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால்  இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் இவ் விபத்து அதிவேகத்தினாலோ  அல்லது சாரதி நித்திரை தூங்கியதனாலோ  இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment