மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவர்

298 0

குடும்பத் தகராறு காரணமாக தனது கணவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய காவல் நிலையம் வந்த மனைவியை அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இங்கிரிய காவற்துறை தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இவர்களுக்கு இடையில் தகராறு நிலவி வந்துள்ள நிலையில் , இதன் காரணமாக குறித்த பெண் அவரது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் , இந்த பெண்ணின் தந்தை சந்தேகநபரால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , வெட்டுக்காயங்களுடன் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி தந்தையை அழைத்துக் கொண்டு குறித்த பெண் இங்கிரிய காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இவர்களை பின்னால் தொடர்ந்த சந்தேகநபர் காவல் நிலைய வளாகத்தில் இருந்த அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் , காவற்துறையினர் உடனே செயற்பட்டு சந்தேகநபரை கைது செய்துள்ள நிலையில் , காயமடைந்த குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment