களனி பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலையில ்கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
களனி பாலத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்கை பலகையொன்று இன்று காலை வாகனமொன்றின் மீது சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக, கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நவலோக்க சுற்றுவட்டத்தின் ஜப்பான் நட்பு பாலத்தின் ஊடாக கொழும்பிற்கு வர முடியும்.
இந்த வீதியை அல்லது மாற்று வீதியை பயன்படுத்தி வாகன நெரிசலை தவிர்க்க உதவுமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை காவற்துறை கோரியுள்ளது.

