புதிய அரசியல் யாப்பை அமுலாக்குவது மாத்திரம் போதாது – அஜித் பீ பெரேரா

331 0
புதிய அரசியல் யாப்பில் அதிகூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கும், ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாதிருக்கவும் இணங்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காகவே மக்கள் ஆணையை வழங்கினார்கள்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியும் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய பல கட்சிகளும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனேயே இருக்கின்றன.
சிறு குழு ஒன்று மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது.
எனவே இனவாத ரீதியான செயற்பாடுகளை தடுப்பதற்கு, புதிய அரசியல் யாப்பை அமுலாக்குவது மாத்திரம் போதாது.
அதனோடு அரசாங்கத்தையும் சக்திமயப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment