இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் கைது!

296 0

ஒரு கோடியே 4 லட்சம் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்களை காவற்துறைக்கு தெரியாமல் கை வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், இரு காவற்துறை உத்தியோகஸ்தர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி, குறித்த தங்க பிஸ்கட்களை, நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய, குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர்கள் தங்க பிஸ்கட்டை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் நேற்று தங்க பிஸ்கட்களுக்கு உரித்தான நபர், காவற்துறை நிலையத்திற்கு சென்று தன்னிடம் இருந்த 16 தங்க பிஸ்கட்களை, தாங்கள் புலனாய்வு அதிகாரிகள் என கூறி அவற்றினை எடுத்து சென்றதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், தங்க பிஸ்கட்களை இது வரை காவற்துறையிடம் ஒப்படைக்காமை மற்றும் தகவல் வழங்காமை தொடர்பில் காவற்துறை உத்தியோகஸ்தர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளதுடன், தங்க பிஸ்கட்களுக்கு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment