அவுஸ்ரேலியாவினால் நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்

359 0
அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 15 இலங்கை அகதிகள் இன்று முற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.
இவர்கள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற நிலையில் அவர்கள் அவுஸ்ரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் 15 பேரும் இன்று காலை 7.30 அளவில் அவுஸ்ரேலியாவின் விசேட வானூர்தி மூலம் நாடு திரும்பினர்.
நாடு திரும்பிய குறித்த இலங்கை குடியேறிகள் அனைவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment