இலங்கை பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு வாழ்த்துறைகள்

436 7
இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருட நாடாளுமன்ற வாழ்க்கை பூர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகின்றது.
எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் அமர்வுகளை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற குழு கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் இவ்வாறு புறக்கணித்ததாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கூடும் தினம் தொடர்பில் உறுதியான தினம் இறுதி நாடாளுமன்ற அமர்வின் போது தீர்மானிக்கப்படாத நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக N;ஜ.வி.பி யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Leave a comment