அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிக்கும் இடையில் பேச்சு

348 0
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்று இரண்டு பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயகலத்தில் இடம்பெறுகிறது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் தற்போது ஒரு பேச்சு வார்த்தை இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மீள் திருத்தத்தின் முன்னேற்றம் மற்றும் உள்ளுராட்சி மன்ற சபைகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுவதில்; நிலவும் தாமதம் குறித்தும் இதன் போது ஆராயப்படவுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment