அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்ட பேரணியை பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளுமாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையில் சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கடந்த 31ஆம் திகதி பேராதனிய நகரில் இருந்து ஆரம்பித்தது.
அந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்றைய தினம் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.
நேற்றைய தினம் கடவத்த நகரில் நிறைவு பெற்ற பேரணி தற்சமயம் கொழும்பை நோக்கி நகர்கிறமை குறிப்பிடத்தக்கது.

