RK என்றால் யார்? உதய கம்மன்பில கூறுகின்றார்

244 0

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிழக்கையில்லா பிரேரணைக்கு மனச்சாட்சிப் படி ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. 
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளார்.

ரவி கருணாநாயக்க விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் RK என்ற நபரை தெரியாது என்று கூறியிருந்த போதிலும், அது அவர் தான் என்று தனக்கு தெரியும் என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் பெயர்களில் முதல் எழுத்து R என்ற எழுத்தும் குடும்பப் பெயராக K என்ற எழுத்துவம் வரக்கூடிய ஒரே உறுப்பினர் ரவி கருணாநாயக்க என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment