அரசியல் கட்சியின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரித்தல் சம்பந்தமாக அரசியல் கட்சியின் செயலாளர்களுடன் இதன்போது பேசுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் பெபரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேர்தலை தொடர்ச்சியாக பிற்போடுவது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஜண ஹெட்டியாரச்சி கூறினார்.

