சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

215 0

பதுறலிய, மொரகஹகேன்வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளைச் சட்டவிரோதமான மதுபானம் வைத்திருந்த மேற்றுமொரு நபரும் குறித்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பதுரலிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment