தமிழக அரசு ஊழல் அரசு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

310 0

தற்போதுள்ள தமிழக அரசு ஊழல் அரசு என்பதுதான் மக்களின் கருத்து என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

இரு அணியினரும் ஒன்றாக இணையப் போவதாக பேசப்பட்டது. ஆனால் இது வரை இணைப்பு முயற்சி எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ஊழல் அரசு என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.அ.தி.மு.க.வின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள்தான் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் அணியில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அழைப்புகளும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே கேள்வி கேட்டு கருத்து சொல்லி அவர்களாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment