இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வெப்ப அச்சுறுத்தல் 

207 0

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில் 2100ஆம் ஆண்டாகும் போது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு பெரும் வெப்பநிலை ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

முற்போக்கு விஞ்ஞான ஆய்வு கழகம் ஒன்றின் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தெற்காசிய நாடுகளில் 75 சதவீதமான மக்கள் மிகவும் அபாயகரமான வெப்ப நிலையுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

அவர்களில் 4 சதவீதமான மக்கள் மனிதர்களால், வாழ முடியாத அளவுக்கு வெப்பநிலை நிலவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாகவே அண்மைக்காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பஅலைகளால் 3000க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.

இந்த நிலைமையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment