வட்டரக்க விஜித்த தேரர் விளக்கமறியலில்

233 0

கைது செய்யப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி;டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக காரியாலய பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை முதலானவை தொடர்பிலே வட்டரக்க விஜித்த தேரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment