இலங்கை கடற்பரப்பில் இன்று கடும் காற்று

326 0

நாட்டைச் சூழவுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் இன்று காலை 10 மணிக்கு பின்னர் அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு வரையிலும், ஹம்பாந்தொட்டை ஊடாக கல்முனை வரையிலும் ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற் பகுதிகளில் இவ்வாறு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

குறிப்பாக மீனவர்களும் கடற்சார் மக்களும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை தருகிறார் காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி கே. சூரியகுமாரன்.

Leave a comment