கிடைத்துள்ள ஊடக சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்- மங்கள சமரவீர

333 0

அரசாங்கம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்தார்.

வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலையைக் காணத் துடிப்பவர்களுக்கு ஊடகங்கள் துணை போகக் கூடாது எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் ஊடகங்களுக்கு சட்ட திட்டங்களை விதிக்கமாட்டாது. எனினும் மக்களுக்கு உண்மையை வழங்கும் பொறுப்பு ஊடகங்களுடையது. ஊடக ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊடகத்தை சிறைப்பிடித்த யுகம் இன்றில்லை எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment