அமைச்சர் ரவி கருணாநாயக்க தவறு செய்தமை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அரசாங்கமும் கட்சியும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ண இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் இதனை தெரிவித்தார்.

