சகல மாகாண சபைகளினதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது ஏதுவான 20வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் 1988 இலக்கம் 2 மாகாண சபைகள் தேர்தல் ஒழுங்கமைப்பின் மூலம் தற்போது தேர்தல்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளவும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

