வடமாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில், நல்லிணக்கத்தை குழப்பும் எண்ணமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் செயற்படும் அடிப்படைவாதிகளைப் போன்று ஏனைய அடிப்படைவாதிகளுக்கும் நாடு வன்முறையுடன் தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
இந்த பிண்ணனியிலேயே வன்முறைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

