தமிழ் இளைஞர் கடத்தல் – கடற்படை ஊடக பேச்சாளரது விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

580 10

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பீ தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 – 2009 வருட காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து காணமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்;டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து கடற்படை சிப்பாய்களது விளக்கமறியல் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

Leave a comment