சயிட்டத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டவும் தடையா?

378 0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சயிட்டம் எதிர்ப்பாளர்களினால் நாடுபூராகவும் மேற்கொள்ளும், போராட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன என, வைத்தியர் ஹரித அளுத்கே கேள்வி எழுப்பியுள்ளார். 

தேசிய சயிட்டம் எதிர்ப்பு தினம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

சயிட்டம் எதிர்ப்பாளர்களின் போஸ்டர்களை நாடுபூராகவும் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு மிகத் தௌிவாக பொலிஸார் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தில் வைத்து அண்மையில் இரவு நேரத்தில் கைப்பற்றப்பட்ட பல போஸ்டர்கள் இன்னும் பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் கருத்து வௌியிடும் சுதந்திரமான போஸ்டர் ஒட்டுதல் போன்ற உரிமைகளைக் கூட அரசாங்கம் தற்போது கட்டுப்படுத்துவதாகவும், பொலிஸாருக்கு இது தொடர்பில் உள்ள உரிமை என்ன எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாணதுறை பகுதியில் போஸ்டர் ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறும் போராட்டங்கள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும், ஹரித அளுத்கே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment