03, 04, 05 ஆம் திகதிகளில் நாடாளாவிய ரீதியல் டெங்கு ஒழிப்பு திட்டம்

2976 0

இடைக்கிடையில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் டெங்கு நுளம்புகள் மீண்டும் அதிகரிக்க கூடும் என்பதால் எதிர்வரும் 03, 04, 05 ஆம் திகதிகளில் நாடாளவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகள், அரச நிறுவனங்கள், கட்டுமான பகுதிகள் மற்றும் தனியார் காணிகள் கடுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், அதிக அவதானமுடைய வலயமும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் இதன்போது அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

சுகாதார அதிகாரிகள், முப்படை வீரர்கள் அடங்கிய 2 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை டெங்கு நோயால் 327 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment