வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்று மழை

34082 96

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மழைபெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
Audio Player

இதேவேளை, ரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment