அமெரிக்க வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் அந்தனி ஸ்காராமசி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பதவி ஏற்று 10 தினங்களுக்குள்ளேயே பதவி நீக்கப்பட்டுள்ளார்.
அவரது செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கான காரணம் என்று என்று கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை புதிதாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்பின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜோன் கெலியினால் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

