தலைமையகத்தின் அனுமதியின்றி இராணுவம் சட்டம், ஒழுங்கில் தலையிடக்கூடாது – மகேஸ்சேனநாயக்க!

391 0

இராணுவத்த தலைமையகத்தின் அனுமதியின்றி இராணுவம் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நேற்று முதற் தடவையாக யாழ்ப்பாணம் பயணம் செய்திருந்தார்.

இதன்போது, யாழ். பலாலி படைத்தளத்தில் படைத் தளபதிகள் மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதுடன், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.

குறிப்பாக, யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும், வாள்வெட்டுச் சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.

 

Leave a comment