ராஜித்தவை சந்திப்பதா.. இல்லையா?

423 0

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இடம்பெறவுள்ள, கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில், இன்று காலை நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு சந்திப்பின் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அச் சங்கத்தின் புதிய அதிகாரிகள் சபையை நியமித்த பின்னர், சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளரை சம்பிரதாயத்திற்காக சந்திக்க வேண்டும்.

இதற்கமைய, அண்மையில் செயலாளருடன் அவர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.

எனவே சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில், இன்று மாலை இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நிலவும் நிலைமைகளுக்கு அமைய, சுகாதார அமைச்சரை சந்திப்பது குறித்து இன்று இடம்பெறவுள்ள நிறைவேற்று சபை கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக, அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment