நுளம்புகளால் 450 பேருக்கு எதிராக வழக்கு 

607 0
நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 450 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களால மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழான பரிசோதனைகளின் போது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக ஆயிரத்து 200 குழுக்கள் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூன்று தினங்களில் 738 டெங்கு நோய் பரவும் வகையிலான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவற்றில் 459 இடங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுமார் 300 மில்லியன் ரூபாவை திரைச் சேரி ஒதுக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அதி நவீன உபகரணங்கள் கொள்வனவின் பொருட்டே இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெங்கு தொற்று குறித்து ஆராயும் பொருட்டு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த குழு பல பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டும் அறிவுறுத்தல்களை அனைத்து அலுவலகங்களும் பின்பற்ற வேண்டும்.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பிற்கான வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகம் கொண்டுள்ள மேல் மாகாணத்தில் வீட்டுக்கு வீடு சென்று சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்ட வேண்டும்.
அவசியம் ஏற்படின் அது ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
டெங்கு தொடர்பான பொருத்தமான குறுகிய காணொளி மற்றும் ஒலி பதிவுகளை ஒளிபரப்பு செய்து டெங்கை கட்டுப்படுத்தும் செயன்முறைகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
டெங்கு நோயாளர்களை பாதுகாப்பதன் பொருட்டு 2000 இராணுவத்தினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து பணியில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பல பரிந்துரைகளையும் அந்த குழு முன்வைத்துள்ளது.

Leave a comment