வடக்கில் கடன் தொல்லைகள் – சீவி விக்னேஸ்வரன் 

20271 179
வசதிகள் நிறைந்த தற்போதைய கால கட்டத்தில், வடக்கில் கடன் தொல்லைகள் நிறைந்து காணப்படுவதாக வடமாகாண முதல்வர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண – நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழாவில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வர்த்தகம் இன்று மேலோங்கி காணாப்படுகின்றது.
இதற்கமைய தற்போது நிதி நிறுவனங்களின் தோற்றத்தால் மக்களிடையே கடன்தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கட்டுப்பாடுகள் மிகுந்த காலத்திலும், அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் வடக்கு பகுதியானது கல்வியில் மிகவும் சிறந்த நிலையில் காணப்பட்டது.
ஆனால் தற்போது நவீன ரக தொழில்நுட்பத்தினால் கல்வி பின்னடைவை கண்டுள்ளதுடன், கல்வி கேள்வி அறிவுகளில் வடமாகாணம் 9ஆவது இடத்தைப்பெற்றுள்ளதாகவும் சீவி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்

Leave a comment