வெனிசுயுலாவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

226 0
வெனிசுயுலாவில் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகிறன.
புதிதாக தெரிவு செய்யப்படும் பேரவைக்கு அரசியல் யாப்பினை மீள வடிவமைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சி பகிஸ்கரித்துள்ளது.
ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ மீளவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்படும் செயல் இது என எதிர்க்கட்சியின் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்கெடுப்பு இடம்பெறும் நாளில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் வீதிமறியல் போராட்டம் இடம்பெறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தேசிய தொலைக்காட்டியில் தோன்றிய ஜனாதிபதி மதுரோ பாரிய வெற்றி தமக்கு கிடைப்பது உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment