மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 நாள் பாதையாத்திரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.அதன் பதில் இணைப்பாளர் சனத் பண்டார கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது இதனை தெரிவித்தார்.
இதற்கமைய இந்த பாதையாத்திரையானது இன்று பேரதெனிய பல்லைக்கழகத்தில் இருந்து ஆரம்பித்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும்.
இதனிடையே மாணவர்கள் மீது ஒடுக்கு முறைகளை பிரயோகித்தால், மாணவர்கள் எதிர்காலத்தில் மோசமான தீர்வுகளை எடுக்க நேரிடும் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்தார்.

