அமெரிக்காவுக்கு சீற்றத்தை ஏற்படுத்துகிறது ஈரான்

314 0

அமெரிக்க சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை யுத்தக்கப்பல் தமது ரோந்து படகுகளுக்கு அருகாமையில் வந்து எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்துள்ளதாக ஈரானிய படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமையும் அமெரிக்க கடற்படைக்கப்பல் ஈரானிய ரோந்து படகுகளை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ரோந்து படகுகள் அமெரிக்க கப்பல்களுக்கு அருகாமையில் வந்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை தாம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment