யுத்த காலத்தில் போன்று அல்லாது தற்போது இராணுவம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, இராணுவ வீரர்களிடம் வலியுறுத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இன்று பிற்பகலில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு முதலமைச்சரின் நல்லூரிலுள்ள உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இராணுவ தளபதி இதனை தெரிவித்ததாக சீவி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

