அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசியலுடன் தொடர்பற்ற குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைக்க வேண்டாம் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

