கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தும் கோடாவை தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கமுவ பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கொன்றிற்காக தெரிவிக்கப்பட்டிருந்த ஆட்சேபனை தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான மற்றும் கோடா தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்யவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஆட்சேபனை வௌியிட்டிருந்தார்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான் பிரதிவாதிகளின் வாதத்தை நிராகரித்ததோடு, கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

