அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவசர கூட்டம்

539 13

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவசர கூட்டம் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய நடத்தவுள்ளார்.

இந்த கூட்டம் அடுத்த மாதம் 4ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தும்படி ஒன்றிணைந்த எதிர்கட்சிகளை வலியுறுத்தி வரும் அதேவேளை, இந்த தேர்தல்களை நடத்த தாம் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment