உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் வேளாண் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு ஆகியவை உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் டன், அதாவது, 15 லட்சத்து 60 ஆயிரம் டன் மாட்டிறைச்சி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது உலகளவில் மூன்றாவது நிலையாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இதே இடத்தில் இந்தியா நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உலக அளவில் ஒரு கோடியே ஒன்பதரை லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியாகியுள்ளது. அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலியா வகிக்கிறது.