ஆசிரியர்கள் பணத்தை மையப்படுத்தி செயற்படாமல் சேவையை முன்னிலைப்படுத்தி செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஆசிரியர்கள் என்பவர்கள் சேவை செய்பவர்களே அன்றி பணியாளர்கள் அல்லவென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

