இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 4 ஆயிரத்து 400 இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பொது மன்னிப்பு காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த முப்படை வீரர்களும் சட்ட ரீதியாக ஓய்வுகளை பெற்றுக் கொண்டிருக்கவில்லையென் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.
தப்பிச் சென்ற இராணுவத்தினரில் 3 ஆயிரத்து 529 பேர் தரைப்படையை சேர்ந்தவர்களாவர், அத்துடன் கடற்படையைச் 805 பேரும் சேர்ந்த 76பேரும் தப்பிச்சென்ற நிலையில் கைதுசேய்யப்பட்டுள்ளனர்.

