தடுமாறுகிறது இலங்கை அணி

348 0

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி 600 ஓட்டங்களை பெற்றிருந்த போது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷிக்கார் தவான் 190 ஓட்டங்களையும் செட்டீஸ்வர் புஜாரா 153 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணிசார்பாக நுவன் பிரதீப் 6 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

Leave a comment