ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள்

510 0

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான யோசனை அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு மத்தியிலும் 96 மேலதிக வாக்குகளால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்னவே இந்த யோசனைக்கு அந்த நாட்டின் கீழ் சபை அங்கீகாரம் வழங்கி இருந்தது.

இந்தநிலையில் குறித்த யோசனையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அவர் இதனை தமது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment